அஞ்சலகங்களில் இனி தமிழில் மணியாடர் படிவம் : எம்.பி. வெங்கடேசன்

அஞ்சலகங்களில் இனி தமிழில் மணியாடர் படிவம் : எம்.பி. வெங்கடேசன்
X

சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்த மதுரை எம்.பி. வெங்கடேசன்.

தமிழக அஞ்சலகங்களில் தமிழில் மணியாடர் படிவம் வழங்க வழிவகை செய்யப்பட்டு, இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாக, வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை: அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money order) சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இணைய வழியில் கிடைக்கின்றன; அஞ்சல்துறை, மக்களுக்கு அந்நியமான மொழிகளை திணிப்பது நியாயமா? என்று மத்திய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் 22.09.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

அத்துடன், இன்று சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்தேன். அப்போது அவர், அஞ்சல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து படிவங்களிலும் தமிழ் இருப்பதை எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வார காலத்துக்குள் பணவிடை மற்றும் சேமிப்புக் கணக்கு சார்ந்த படிவங்களில் தமிழ் இருக்கும். என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அன்னைத் தமிழுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

உடன், தலைமை அஞ்சல் அதிகாரி செல்வக்குமார், இயக்குனர் ஆறுமுகம் மற்றும் சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மற்றும் சுவாமிநாதன் ஆகியோர். கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project