மதுரை விமான நிலையத்தில் மர்ம பார்சலால் திடீர் பரபரப்பு

மதுரை விமான நிலையத்தில் மர்ம பார்சலால்  திடீர் பரபரப்பு
X

விமான நிலையத்தில் பார்சலில் வந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு தடுப்பு போலீஸார் 4 பார்சல்களையும் பாதுகாப்பாக மணல் மூட்டைகள் அடுக்கி சோதனை செய்தனர்

விமான நிலையத்தில் பார்சலில் வந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் மூலம் டெல்லி செல்லும் 4 பார்சல்களை ஸ்கேன் செய்தபோது வயர் போன்ற மர்ம பொருளால் பதற்றம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்த போது, திருநெல்வேலியில் இருந்து டெல்லிக்கு அனுப்ப வந்த பார்சலில் வயர் போன்ற பொருள் தெரிந்ததால், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நான்கு பார்சல்களை பாதுகாப்புடன் எடுத்து சோதனை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு போலீஸார் வரவழைக்கப்பட்டு 4 பார்சல்களும் பாதுகாப்பாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வெடிகுண்டு தடுப்பு போலீஸாரால் சோதனை செய்தனர். மான்சரம், பார்க், உத்தம் நகர் டெல்லி என்ற முகவரிக்கு 4 பார்சல்கள் அனுப்பபட்டது. பார்சல்களை, வெடிகுண்டு தடுப்பு போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து பார்த்த போது,அதன் உள்ளே டைரிகள் மற்றும் பரிசு பொருட்கள், சார்ஜர் வயர் இருந்தது தெரியவந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!