மதுரை அருகே நான்கு வழிச் சாலையை கடக்க முடியாமல் மாணவிகள் அவதி

மதுரை அருகே நான்கு வழிச் சாலையை கடக்க முடியாமல் மாணவிகள் அவதி
X

வலையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல நான்கு வழிச் சாலையை கடக்க பொதுமக்கள் மாணவர்கள் அவதிப்படும் நிலை தொடர்கிறது.

இப்பகுதியில் மேம்பாலம், தரைப் பாலம் அமைத்துக் கொடுத்தால் தாங்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க முடியும் என தெரிவித்தனர்

வலையங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல நான்கு வழிச் சாலையை கடக்க பொதுமக்கள் மாணவர்கள் அவதி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா அருகே உள்ள மலையன்குளம் ஊராட்சியில் உள்ளது. ஊராட்சிக்கு கிழக்குப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளி உள்ளது . இங்கு பயிலும் மாணவர்கள் வலையங்குளம் வளையபட்டி, பாரபத்தி போன்ற சிற்றூர்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடந்து பள்ளிக்கு செல்வதால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் தொடர்கிறது.

ஏற்கெனவே, பள்ளி மாணவர்கள் 3 பேர் பொதுமக்கள் 2 பேர் என ,ஐந்து பேர் வலையங்குளம் சாலை விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில், காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர் ஒருவரை அனுப்பி காலை 8 மணிமுதல் 10 மணிவரை மாலை 3 மணிமுதல் 5 மணிவரை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க உதவி செய்ய வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், இப்பகுதியில் மேம்பாலம் அல்லது தரைப் பாலம் அமைத்துக் கொடுத்தால் தங்களுக்கு வசதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்ய முடியும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story