மதுரை மாநகராட்சி மாணவர்கள் அமைச்சருடன் சந்திப்பு..!

மதுரை மாநகராட்சி மாணவர்கள் அமைச்சருடன் சந்திப்பு..!
X

சென்னை சென்ற மதுரை மாணவர்கள்,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜனுடன்.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஒரு நாள் பயணமாக விமானத்தில் சென்னை சென்றபோது மாணவ்ர்களை அமைச்சர் சந்தித்து வாழ்த்து கூறினார்.

மதுரை மாநகராட்சி மாணவர்கள், அமைச்சருடன் சந்திப்பு

மதுரை:

மதுரை ரோட்டரி மிட் டவுன் கிளப் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் அருங்காட்சியகம் போன்றவற்றை காண்பதற்காக மதுரை திரு.வி.க. மாநகராட்சி பள்ளி, வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஒரு நாள் பயணமாக சென்னை வந்திருந்ததையொட்டி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், அம்மாணவ - மாணவிகளை தமது முகாம் அலுவலகத்தில் சந்தித்து , உரையாடினார்.


அத்துடன் முதல் முறையாக விமானத்தில் பயணித்த அவர்களின் அனுபவம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் அவர்கள், தன்னுடைய முதல் விமான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதோடு, தமது முகாம் அலுவலகத்தில் அவர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருந்த மாலை சிற்றுண்டியை வழங்கி, வழியனுப்பி வைத்தார்.

இவ்வாறான பயணங்கள் மாணவ மாணவிகளுக்கு அரசு நடைமுறைகளை அறிந்துகொள்வதுடன் அரசியல் பற்றிய அறிவும் ஏற்படும். குறிப்பாக மாணவர்களை விமானத்தில் பயணிக்க வைத்து அவர்களின் பயணத்தை சிறப்பாக்கியது போற்றுதலுக்கு உரியது. பயணம் குறிப்பாக சிந்திக்க வைக்கவும். மனதை மகிழ்ச்சிப்படுத்தும். இந்த மகிழ்ச்சி மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்கும் கருவியாக இருக்கும்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!