கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு

கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
X

பைல் படம்.

மதுரை கோட்டத்திற்குட்பட்ட மூன்று பிரிவுகளில் கூடுதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை - ராமேஸ்வரம், திருநெல்வேலி - திருச்செந்தூர், செங்கோட்டை - திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கனவே, இந்த பிரிவுகளில் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பயணிகளின் வசதிக்காக தற்போது, மேலும் ,ஒரு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 1. மதுரை - ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் மே 30 முதல் இயக்கப்படும்.

மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06651) மதுரையில் இருந்து காலை 06.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு இராமேஸ்வரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06656) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு புறப்பட்டு இரவு 09.55 மணிக்கு மதுரை வந்து சேரும்.

2. திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் மே 30 முதல் இயக்கப்படும் திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06674) திருச்செந்தூரில் இருந்து காலை 07.10 மணிக்கு புறப்பட்டு காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06677) திருநெல்வேலியில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு இரவு‌ 08.30 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.

3. செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து மே 30 முதலும் செங்கோட்டையில் இருந்து மே 31 முதலும் இயக்கப்படும். செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06682) செங்கோட்டையில் இருந்து காலை 06.40 மணிக்கு புறப்பட்டு காலை 08.50 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06657) திருநெல்வேலியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு இரவு 08.35 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!