மின் கட்டண உயர்வை கண்டித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பார்வர்ட் பிளாக் கட்சியினர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில், நிறுவனத் தலைவர் திருமாறன் அறிவுறுத்தலின்படி, மாநில பொதுச்செயலாளர் சபரி, மதுரை மாநகர் மா ட்டத் தலைவர் ராஜா மாறன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சி பொதுச் செயலாளர் முகமது தாரிக், இந்து மகா சபா தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை திரும்பப்பெறக் கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்து உள்ளது. இதனால், நடுத்தர மக்கள் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறு, குரு தொழில் செய்பவர்கள் மிகுந்த தொழில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், மேலும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் என்பது அதிகரித்துள்ளது .
கொலை, கொள்ளை நாள்தோறும் அதிகரித்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வீதிகளில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்னிந்திய ஃபார் பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளர் சக்திவேல் ராஜ், பிரதீப், மகளிர் அணி மாநிலத் தலைவி தெய்வ சக்தி, முனிச் சாலை பாண்டி, பழனிவேல், தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சி நிர்வாகிகள் சுரேஷ், அரவிந்த் பாண்டியன், கனகராஜ், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu