மதுரையில் குடும்ப பிரச்னையால் மாமியாரை தாக்கிய மருமகன் கைது
பைல் படம்
பையில் பணம் இருப்பதாக நினைத்து ஜூஸ் குடித்தவரை தாக்கிய ஜூஸ் கடைக்காரர் கைது:
தெற்குமாசி வீதியை சேர்ந்தவர் அன்பு செழியன் மகன் விவேக் 32. இவர் தெற்கு மாசி வீதியில் உள்ள ஜூஸ் கடைக்கு ஜூஸ் குடிக்க சென்றார். அங்கு ஜூஸ் குடித்துவிட்டு பார்த்தபோது மணி பர்சை அலுவலகத்தில் வைத்து விட்டு வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை எடுத்து கூறி அலுவலகம் சென்று எடுத்து வருவதாக சொல்லியுள்ளார். இதற்கு மறுத்த கடைக்காரர் கமுதி வேப்பங்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் சக்திவேல் 29 என்பவர் இதற்கு மறுத்துவிட்டு அவரை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விவேக் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய ஜூஸ் கடை உரிமையாளர் சக்திவேலை கைது செய்தனர்.
செல்லூர் 60 அடி ரோட்டில் கத்தி முனையில் ரூ.1900 வழிப்பறி இரண்டு பேர் கைது:
மதுரை செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு தாகூர் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் துரைராஜ் 28 .இவர் செல்லூர் 60 அடி ரோடு அய்யனார் கோவில் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அவரை இரண்டு பேர் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவருடைய சட்டை பையில் இருந்த ரூபாய் 1900ஐ வழிப்பறிசெய்தனர். இந்த வழிப்பறிகுறித்து அவர் செல்லூர் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் அவரிடம் வழிபறியில் ஈடுபட்ட சங்கர்லயன் கதிரவன் என்ற குட்டையஅஜித், சத்யமூர்த்தி தெருவை சேர்ந்த ஜெயமணி மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருப்பாலையில் உறவுக்கார பெண்ணிடம் செல்போனில் மிரட்டிய வாலிபர் கைது:
மதுரை அருகே திருப்பாலை உச்சா பரம்பு மேடு நியூ.ஏ.டி.காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி பிரபா தேவி( 24 ) .இவருடைய உறவுக்காரர் சத்திரப்பட்டி மஞ்சள்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் தினேஷ்குமார்( 27.). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள் .குடும்ப பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பிரபாதேவியை செல்போனில் அழைத்த தினேஷ் குமார், அவரை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார் .இந்த சம்பவம் குறித்து பிரபாதேவி , திருப்பாலை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் தினேஷ்குமாரை கைது செய்தனர்.
மதுரை கே புதூரில் குடும்ப பிரச்சினையில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்:
கே புதூர் பாண்டியன் நகர் காந்திபுரம் மேற்கு முதல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி கமலி 21. இவருடைய சகோதரியின் கணவர் மணிகண்டன் மகன் ராஜ் 22. இவர் தனது மாமியாரை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதை அவர் மனைவியின் தங்கை கமலி தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திமடைந்த ராஜ் மாமியாரையும் மனைவியின் தங்கையையும் மீண்டும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மனைவியின் தங்கை கமலி கே. புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை தாக்கிய மருமகன் ராஜை கைது செய்தனர்.
வில்லாபுரம் மீனாட்சி நகரில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை: போலீஸார் விசாரணை:
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சசிகுமார் 41. சில தினங்களாக இவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவத்தை அவரது மனைவி இந்துமதி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சசிக்குமாரின் உடலைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் - ஐ உடைத்து திருட முயன்ற உ.பி.மாநில வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது:
மதுரை நரிமேடு பெண்கள் கல்லூரி அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் உள்ளது.சம்பவத்தன்று இரவில் ஏடிஎம் மையத்துக்குள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஏடிஎம் மெஷின், பணம் டெபாசிட் மிஷினையும் உடைத்துள்ளனர். பலமுறை உடைத்தும் அதை திறக்க முடியாததால் மெஷினை சேதப்படுத்திவிட்டு ஓடிவிட்டனர். இந்த தகவல் பின்னர் தெரிய வந்தது. இது குறித்து ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் அதிகாரி, அவனியாபுரம் அருப்புக்கோட்டை, மெயின் ரோடு, கிரீன் சிட்டிகார்டனை சேர்ந்த வேலப்பன்( 59 )இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம்மில் இருந்த சி சி வி டிவி கேமரா பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.பின்னர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சொக்கிகுளம் அண்ணாநகரை சேர்ந்த ஜெயக்குமார்( 47,). உத்திரபிரதேச மாநிலம் சமேம்பூரைச் சேர்ந்த துர்கா மகன் நித்தியான(31 )ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தத்தனேரியில்வீட்டின் முன்பாக கட்டியிருந்த ஜல்லிக்கட்டு காளை திருட்டு:போலீஸ் விசாரணை:
மதுரை தத்தனேரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் பொன்னம்பலராஜதுரை. இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார்.பொங்கல் பண்டிகையும் ஜல்லிக்கட்டு போட்டியும் நெருங்குவதால் அதற்கு பயிற்சியும் அளித்துவந்தார்.இந்நிலையில் இந்த காளையை வீட்டின் முன்பாக கட்டி இருந்தார். இரவு முடிந்து அதிகாலை பார்த்தபோது ஜல்லிக்கட்டு காளை காணவில்லை. மர்ம நபர் அந்த காளையை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து அவர் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜல்லிக்கட்டு காளையை திருடிச் சென்ற திருட்டு மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருமங்கலத்தில் அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை:
மதுரை.டிச 14 திருமங்கலத்தில் தனியார் கல்லூரிக்குள் அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேரையூர் தாலுகா குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பால்சாமி மகன் பாஸ்கரன்( 36.). இவர் சிவகங்கை மாவட்டம், கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வந்தார் .
இவருக்கு திருமணம் ஆகவில்லை .சில நாட்களாக இவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திருமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த தனியார் கல்லூரிக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய தம்பி ரமேஷ் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் ஆசிரியர் பாஸ்கரன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu