மதுரை அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதல்: 5 பேர் காயம்

மதுரை அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதல்: 5 பேர் காயம்
X

மதுரை அருகே லாரி மீது மோதிய ஆட்டோ.

மதுரை அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் கருப்பணசாமி கோவில் அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற ஷேர் ஆட்டோ லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோவில் இருந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் தூக்கி வீசப்பட்டதில் அனைவரும் படுக்காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார், படுகாயம் அடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காலை 7 மணி அளவில் நடந்த விபத்து காரணமாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!