பாலமேடு வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஆலய விழா..!

பாலமேடு வடக்கு வாசல்   செல்லாயி அம்மன் ஆலய விழா..!
X

பாலமேடு வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழாவுக்கு பொங்கல் வைப்பதற்காக ஊர்வலமாக வந்த பெண்கள் 

பாலமேட்டில் வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பழத்தட்டு ஊர்வலம்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு, தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவானது கடந்த மே மாதம் 31ஆம் தேதி செல்லாயி அம்மனுக்கு சாமி சாட்டுதல் செய்து காப்பு கட்டுதளுடன் தொடங்கியது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த இந்த உற்சவ விழாவில் சிறப்பு வானவேடிக்கை முழங்க திருக்கண் திறந்து அலங்கார அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டாம் நாள் திருவிழாவில் மஞ்சக்கருப்பு சுவாமிக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலாகுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூன்றாம் நாள் திருவிழாவாக வானவேடிக்கை முழங்க சிறப்பு அலங்காரத்துடன் சுமார் 500ககும் மேற்பட்ட பெண்கள் வாழைப்பழம் தேங்காய் ரோஜா பூ மாலை உள்ளிட்ட தாம்பூல பழத்தட்டு ஊர் மந்தையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வந்து செல்லாயி அம்மன் ஆலயத்திற்கு சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. குழந்தை வரம் வேண்டுவோர்க்கு அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் இந்த திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கிழக்கு தெரு, தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை செய்திருந்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers