திருமங்கலம் பேரையூர் பகுதியில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது

திருமங்கலம் பேரையூர் பகுதியில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

திருமங்கலம் பேரையூர் பகுதியில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த பேரையூர் மெயினுத்தம்பட்டியுள்ள ஓடை பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மெயின் ஊத்த பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி வயது( 37) என்பவர் டிராக்டர் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளுவதை கண்டுபிடித்தனர்.

போலீஸார் விசாரணையின்போது அனுமதி சீட்டு வாங்காமல் மண் அள்ளுவது தெரியவந்தது. போலீசார் திருட்டுத்தனமாக மண் அள்ளியதால் கருத்த பாண்டியை கைது செய்து, டிராக்டரையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்