அலங்காநல்லூர் அருகே ,சந்தனக்கூடு திருவிழா!

அலங்காநல்லூர் அருகே ,சந்தனக்கூடு திருவிழா!
X
அலங்காநல்லூர் அருகே ,சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சந்தனக்கூடு திருவிழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்ஹா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வழிபாடு செய்து நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம்.

இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று இரவு தொடங்கியது. இதையொட்டி தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனம் இட்ட கொடிமர திருவிழா நடந்தது. பின்னர் இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

மேளதாளம் முழங்க அய்யூர் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் அலங்காநல்லூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சந்தனக்கூடு நிறைவடைந்த நிலையில் தர்ஹாவிற்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. முன்னதாக சந்தனகூடு விழாவினை முன்னிட்டு பள்ளிவாசல், தர்ஹா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!