திருமங்கலம் அருகே வாகனத்தில் செல்லும் பெண்களிடம் வழப்பறி: இளைஞர் கைது
பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட ராஜ்குமாருடன் போலீசார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி, கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இது சம்பந்தமாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், திருமங்கலம் திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமை காவலர் சரவணகுமார், அருள்ராஜ், சரவணன் , வயக்காட்டு சாமி, முத்துக்குமார் ஆகிய போலீசார் முயற்சியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில், குற்றச் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா உதவியால், உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் நாட்டாபட்டியை சேர்ந்த நாககுமார் மகன் ராஜ்குமார் வயது 27 என்பவர் என்று தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 13 சவரன் 4 கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரனையில் கஞ்சா போதைக்கு அடிமையானதால் இது போன்ற குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதை குற்றவாளி ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், வழிப்பறி நடைபெற்றதை அறிந்த தனிப்படை போலீசார் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், தொடர் கொள்ளைகளை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணி ஈடுபடுத்தபட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் விதத்தில் உடனடியாக போலீஸ் அவசர உதவி எண் 100 ஐ தொடர்புகொள்ள வழியுறுத்தியும் பாதுகாப்பாக வெளி பயணம் செய்யவும் திருமங்கலம் தாலுகா மற்றும் டவுன் போலீசாரும் வழியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu