திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் கைது
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்.
மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஒவ்வொரு உட்கோட்ட அளவில் தனிப்படை ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலையம், கூடக்கோவில் காவல் நிலையம் மற்றும் மேலூர் காவல் நிலையம் ஆகியவற்றில் தாக்கலான வழிப்பறி மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் மண்டேலா நகரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் முத்து முருகன், பெருங்குடி மகாராஜா மகன் ஸ்ரீராம், பெருங்குடி சரவணா காலனியைச் சேர்ந்த சாத்தப்பன் மகன் சந்துரு, பெருங்குடி ராஜ்குமார் மகன் ஆகாஷ் ஆகிய நால்வரையும் திருமங்கலம் உட்கோட்ட தனிப்படையினர் கைது செய்தனர்.
பின்னர் பெருங்குடி காவல்நிலைய வழக்கில் வழிப்பறி செய்யப்பட்ட மொபைல் போன் மற்றும் பெருங்குடி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு இருசக்கர வாகனத் திருட்டு, கூடக்கோவில் காவல் நிலையத்தில் ஒரு இருசக்கர வாகன திருட்டு மற்றும் மேலூர் காவல் நிலையத்தில் ஒரு இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி வழக்குகளில் திறம்பட செயல்பட்டு எதிரிகளையும் களவுபோன சொத்துக்களையும் மீட்ட சார்பு ஆய்வாளர் திரு ராமகிருஷ்ணன் தலைமையிலான தனி படையினரையும் மற்றும் திருமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu