சோழவந்தான் அருகே பலத்த மழை! சாலையில் மரம் சாய்ந்து, போக்குவரத்து பாதிப்பு!

சோழவந்தான் அருகே பெய்து வரும் பலத்த மழையால், சாலையில் மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது

சோழவந்தான் அருகே திருவேடகம் சீரடி சாய்பாபா கோவில் முன்பாக மதுரை மாநகராட்சி குடிநீர் பெரிய குழாய் பதித்து வருகின்றனர்.

இதற்கான வேலை, மிஷின் மூலம் சுமார் 10 அடி ஆழத்தில் தோண்டப்பட்டு வருகிறது. இதனால், அருகில் உள்ள மிகவும் பழமையான மரங்கள் நேற்று பெய்த மழைக்கு திருவேடகம் சோழவந்தான் மெயின் ரோட்டில் குறுக்கே விழுந்தது. அப்போது ,அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராதால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அகற்றினர். ஒருமணி நேரத்திற்குப் பிறகு சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்து சீரானது. மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டக்கூடிய குழிகள் முறையாக தோண்ட வேண்டும் எனவும், தோண்டக்கூடிய குழி அருகே மரங்கள் இருந்தால் பாதுகாப்பாக தோண்ட வேண்டும், தோண்டக்கூடிய குழிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வாகனங்கள் செல்வதற்கு ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே, இப்பகுதியில் ரோடு குறுகளாக இருக்கக்கூடிய நிலையில் மதுரை மாநகராட்சி சேர்ந்தவர்கள் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டி பைப்பை பதித்து விட்டு ,மேலே மண்ணை மூடிவிட்டு செல்கின்றனர். ஆனால், முன்பு இருந்தது போல் தோண்டப்பட்ட இடத்தில் ரோடு அமைத்து கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டையும் கூறுகின்றனர்.

இதனால், வாகனங்கள் பல விபத்துகளுக்கு உள்ளாகின்றன. அதில் வரக்கூடிய மக்கள் பல சிரமத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட மதுரை மாநகராட்சி பைப் வேலைக்காக தோண்டக்கூடிய பகுதியை முழுமையாக செப்பனிட்டு முன்பு எப்படி இருந்ததோ அதேபோல் ரோடு அமைத்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமம் வரை குழாய் பதிக்க சாலையோரமாக புறம்போக்கை அப்புறப்படுத்தி குழிகள் தோண்டி, குழாய்களை அமைத்து வந்தனர்.

ஆனால், தீடீரென தச்சம்பத்து பஸ் ஸ்டாப்பில் இருந்து குழாய்களை பதிக்க சாலையிலே தோண்டி குழாய்களை பதிக்க தொடங்கியுள்ளனர்.

மழைக்காலங்களில், இப் பகுதியில் வாகனத்தில் செல்வோர், கவனமாக செல்லாவிடில், விபத்துகளை சந்திக்க நேரிடும்.

மேலும், தார்ச் சாலைகளில் பள்ளம் தோண்டாமல், சாலையோரமாக புறம்போக்கை அகற்றி சாலைகளை தோண்ட சமூக ஆர்வலர்கள், மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!