சோழவந்தான்- திருமங்கலம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

சோழவந்தான்- திருமங்கலம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
X

பைல் படம்.

சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையை அடுத்த சோழவந்தானிலிருந்து, திருமங்கலத்திற்கு போதிய பேருந்துகள் இல்லாததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட அளவில் மட்டும் பேருந்துகளை இயக்குவதாலும், மேலும் வரக்கூடிய பேருந்துகளும் குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால், சோழவந்தானிலிருந்து காலை மற்றும் மதியம் மாலை இரவு என, குறிப்பிட்ட இடைவெளியில் பேருந்துகளை இயக்க வேண்டும்.

மேலும், தற்போது இயக்கப்படும் பேருந்துகளையும் முறையாக குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்லுமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர். விரைவில் சட்டமன்ற உறுப்பினரிடம் இது குறித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story