மதுரை தமிழ்சங்க நுழைவு வாசலில் எம்.ஜிஆர் படம் அகற்றம்: முன்னாள்அமைச்சர் கண்டனம்

மதுரை தமிழ்சங்க நுழைவு வாசலில் எம்.ஜிஆர் படம் அகற்றம்: முன்னாள்அமைச்சர் கண்டனம்
X

சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்

எம்ஜிஆர் படத்தை மீண்டும் வைக்காவிட்டால் மதுரை மாவட்ட மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்

ஸ்டாலின் புரட்சித்தலைவரை பெரியப்பா என்று கூறிய பொய்யுரை மதுரை உலக தமிழ்ச்சங்க நுழைவாயிலில் எம்ஜிஆர் படத்தை அகற்றி மூலம் நிரூபனம் ஆகி உள்ளது.படத்தை மீண்டும் வைக்காவிட்டால் எடப்பாடியாரின் அனுமதியுடன் மதுரை மாவட்ட மக்களை திரட்டி போராட்டத்தை நடத்துவோம் என்றார்சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்.

இலக்கியத் திருவிழாவில் திமுகவின் ஆட்சிக்காலம் என்பது எப்போதுமே தமிழ் ஆட்சி காலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். மீனாட்சி சொக்கநாதர் கொண்ட மதுரையிலே 5 வது உலகத்தமிழ் மாநாட்டை 1986 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் நடத்திக் காட்டினார்கள் .தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றை பறைசாற்று வகையிலே அமைந்தது என்று உலக தமிழர்களால் பாராட்டப்பட்டது

மதுரையில் தமிழ் மொழியின் அடையாளமாக, மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் புரட்சித்தலைவர் 1986 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய கல்வெட்டு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகைப்படம், அடிக்கல் நாட்டி தொடக்க விழா நடத்திய காட்சியை உலக தமிழ் சங்கத்தின் முகப்பு வாயிலிலே வைத்து மரியாதை செய்து அது ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.. ஆனால் இன்றைக்கு அது அகற்றப்பட்டுள்ளது

புரட்சித்தலைவரை வாக்குக்காக என் பெரியப்பா என்று அழைத்த முதலமைச்சர், இன்றைக்கு இதை அறிவாரா என்பது இந்த நாட்டு மக்கள் கேள்வியாக எழுப்பி வைத்து இருக்கிறார்கள். வாய்க்கு வாய் நான் அவரோடு பழகியவன், வளர்ந்தவன், என்னை ஆளாக்கியவர் என்றெல்லாம் ஒரு பொய்யுரையை ஸ்டாலின் அவிழ்த்து விட்டிருப்பது இப்போது உண்மையாகி இருக்கிறது. படத்தை நீங்கள் அங்கு இருந்து அகற்றிவிட்டு ,உலக தமிழ் சங்கம் என்று நீங்கள் வைத்து இருக்கிற அந்த படம் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக காட்டுகிறது.

தமிழ் மொழியை பறைசாற்ற வேண்டும் என்பதற்காக பேரறிஞர் அண்ணா 2 வது உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். புரட்சித்தலைவர் 5 -ஆவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையிலே நடத்தி தமிழன்னை சிலை திறந்து வைத்து வரலாற்று சிறப்பை உருவாக்கினார்.அதை தொடர்ந்து ஜெயலலிதா 8 வது உலக தமிழ் மாநாட்டை தஞ்சை தரணியில் நடத்திக் காட்டினார்கள்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 50 லட்சம் நிதி கேட்டபோது, அப்போது கருணாநிதி 10 லட்சம் ரூபாயை தவணை முறையில் தருவேன் என்று கூறினார். ஆனால் புரட்சித்தலைவி அம்மா ஒரே தவணையில் அந்த நிதியை வழங்கினார் .அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க எடப்பாடியார் நிதியை அள்ளிக் கொடுத்தார்.

புரட்சித்தலைவர் படத்தை நீங்கள் அகற்றலாம். ஆனால் மக்கள் மனதில் இருந்து நீங்கள் புரட்சி தலைவரை அகற்றிவிட முடியாது. ஆகவே அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது எல்லை தாண்டிய நிலையிலேயே இருப்பதை ஒவ்வொரு வாக்காளர்களும் இன்றைக்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புரட்சித்தலைவரின் அந்த கல்வெட்டு, திருவருவப்படம் உடனடியாக வைக்கப்பட வேண்டும் இல்லை என்றால் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரின் ஆணையைப் பெற்று மதுரை மாவட்டத்தை ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டக் களத்திலே மதுரை மக்களோடு சேர்ந்து இந்த அநீதியை கண்டித்து போராடுவோம் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஆர்.பி. உதயகுமார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!