திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
X

கைப்பற்றப்பட்ட கடத்தல் அரிசி. 

திருமங்கலம் பெரிய கடை வீதியில், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பெரியகடை வீதி பகுதியில், விஸ்வநாதன்(47) என்பவர் ரேஷன் அரிசியை கடத்தப்படுவதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருமங்கலம் பெரியகடைவீதி பகுதியில், உணவு கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது. விசுவநாதன் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 40 கிலோ எடையில் 118 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது, கிட்டத்தட்ட 4 3/4 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி ஆகும்.

இதனை தொடர்ந்து போலீசார், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விஸ்வநாதன் மீது அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!