திருமங்கலம் அருகே மழைநீரில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு

திருமங்கலம் அருகே மழைநீரில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு
X

மழை நீரில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

மதுரை அருகே கண்மாய் உடைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வாகைகுளம் பிரிவின் அருகே உள்ள சூர்யா நகரில், கண்மாய் உடைந்து வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் வெளியே வர முடியாமல் தவித்த, 5 நபர்களான குமரவேல் வயது 78 , மனைவி பாப்பா வயது 72 , மகள் மேரி வயது 32 , மகள் அஸ்விதா வயது 6 , மாமனார் அபேஸ் வயது 52 ஆகியோரை, திருமங்கலம் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று மீட்டு, திருமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!