மதுரையில் புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை தரிசித்த பக்தர்கள்

மதுரையில்  புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை தரிசித்த பக்தர்கள்
X

மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் , சித்தி விநாயக ஆலயத்தில் அலங்காரத்தில் காட்சியளிக்கும் பெருமாள்.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை மதுரை கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

புரட்டாசி முதல் சனிவாரத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி ஆலயம், கூடலகப்பெருமாள் ஆலயம், திருமொகூர் காளமேகப் பெருமாள் திருக்கோவில், நரசிங்க பெருமாள், அண்ணா நகர் ஆலமரம் சேவுகப் பெருமாள் திருக்கோவில்.

மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம், மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், மற்றும் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில், வடக்கு மாசி கிருஷ்ணன் கோவில், சோழவந்தான் ஜெனகநாராயணப் பெருமாள் ஆகிய கோயில்களில், புரட்டாசி சனிவாரத்தை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்... புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும்.இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும், மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள்.

அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.

இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர். புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் பிணி அதிகமாக வரும். ஆகையால் புரட்டாசி மாதம் சீக்கிரம் ஜீரணம் ஆககூடிய உணவு வகைகளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.

திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare