மதுரை அருகே மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

மதுரை அருகே மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
X

மதுரை மாவட்டம் வளையங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 755 பயனாளிகளுக்கு 7 .10 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

மதுரை மாவட்டம், வளையங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்,755 பயனாளிகளுக்கு ரூ.7.10 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வளையங்குளம் கிராமத்தில் இன்று (26.04.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக755 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 10 இலட்சத்து 91 ஆயிரத்து 740 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், அரசுத்துறை அலுவலர்கள் கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருப்பரங்குன்றம் வட்டம், வளையங்குளம் கிராமத்தில் இன்றைய தினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் 755 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 10 இலட்சத்து 91 ஆயிரத்து 740 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடும் நோக்கில் வீடு இல்லாத நபர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் வீடுகள் கட்ட உதவி செய்யப்படுகின்றது. மேலும், விளிம்பு நிலை மக்களைக் கண்டறிந்து தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில்,

இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 630 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகள் வழங்கப்படுகின் றன. அதேபோல,சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இத்திட்டத்தின் கீழ் 24 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை 34 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை 21 நபர்களுக்கு முதிர்கன்னி உதவித்தொகை என மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்படுகின்றது. இதுவரை மாதாந்திர உதவித்தொகை பெறாத தகுதியான நபர்களைக் கண்டறிந்து அனைவருக்கும் உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான் ஷு நிகம், வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் இரா.சௌந்தர்யா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வேட்டையன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story