திமுக அரசின் ஒராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம்: நிர்வாகிகள் ஆலோசனை

திமுக அரசின் ஒராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம்: நிர்வாகிகள் ஆலோசனை
X

திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தொடர்பார சோழவந்தானில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

சோழவந்தானில் வரும் 16 ம் தேதி நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது

திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தொடர்பார சோழவந்தானில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் வரும் 16ம் தேதி நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, அறிவுறுத்தலுக்கிணங்க, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில்,சோழவந்தான் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர்கள் பசும்பொன் மாறன், பால. ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சேகர், சோழவந்தான் பேரூர் செயலாளர் முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி மன்றத்தலைவர் ஜெயராமன், வழக்கறிஞர் முருகன் முன்னிலை ஆகியோர் வகித்தனர்.

இதில், திமுக நிர்வாகிகள் வாடிப்பட்டி பால்பாண்டி, சோழவந்தான் பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன், பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள் செந்தில், செல்வராணி, சிவா, ஒன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்ரமணி, மன்னாடிமங்கலம் ரேகா வீரபாண்டி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, திருவேடகம் கிளைச் செயலாளர் ராஜா என்ற பெரியகருப்பன், இரும்பாடி முத்து பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!