திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி போராட்டம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி போராட்டம்
X
சுங்கச் சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில் 200 க்கு மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச் சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை அருகே சுங்கச் சாவடி அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி, வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கப்பலூர் சுங்கச் சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில், இரு நூறுக்கு மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச் சாவடி அருகே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும், போலீஸார் வந்து பேச்சு நடத்திய பிறகு பஸ்களை செல்ல அனுமதித்தனர். இதையடுத்து சுங்க சாவடியை அகற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.சில அரசியல் கட்சியின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது