மருத்துவமனை கழிவுகளை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொட்ட எதிர்ப்பு

மருத்துவமனை கழிவுகளை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொட்ட எதிர்ப்பு
X

மருத்துவமனை கழிவுகள், குப்பை தொட்டியில் காட்டப்படுகிறது.

மதுரை மருத்துவமனை கழிவுகளை மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்ட எதிர்ப்பு

மாநகராட்சி அரசு மருத்துவ மனைகளின் மருத்துவக்கழிவுகளை மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போடக்கூடாது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கை மருத்துவ கழிவுகள் மற்றும் மருத்துவமனையில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியே கொட்ட வேண்டும். ஆனால், மருத்துவமனை தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சிலர் மருத்துவமனை வார்டுகளில் சேரும் மருத்துவ கழிவுகள் தரம் பிரிக்காமல் மொத்தமாக குப்பைத் தொட்டியில் போடுவதாக மாநகராட்சி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

குறிப்பாக, அறுவை சிகிச்சையின் போது பயன்படும் பஞ்சு, சிரஞ்சு சலைன் பாட்டில் உன்னிடம் மருத்துவ கழிவுகள் மொத்தமாக குப்பை தொட்டியில் போடுவதால், அதை நாங்கள் பிரிக்கும் கையில் ஊசி குத்துவதும் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என, மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இது குறித்து, மருத்துவமனை தனியார் ஒப்பந்ததாரரிடம் மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து தாருங்கள் என பலமுறை சொல்லியும் எங்களால் இப்படித்தான் தர முடியும் என, சொன்னதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து, மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறுகையில்: குப்பைகளை தவறாக கையாளும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்..

மதுரை நகரில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளும் மருத்துவமனையில் சேரும் அறுவை சிகிச்சை செய்த குப்பைகளை மாநகராட்சி கழிவு நீர் கால்வாய் கொட்டுவதால் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுரை மாநகராட்சி நிர்வாகம், மருத்துவ கழிவுகளை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொட்டும் தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story