மதுரை; கிருஷ்ணர் வேடம் அணிந்த மாணவர்களுக்கு பரிசு

மதுரை; கிருஷ்ணர் வேடம்  அணிந்த மாணவர்களுக்கு பரிசு
X

கிருஷ்ணர் வேடம் அணிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கிருஷ்ணர் வேடம் அணிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் கிருஷ்ணர்- ராதை வேடமணிந்த சிறுவர் சிறுமியர்கள்: பரிசு‌ வழங்கி பாராட்டு

மதுரையில் அனுஷத்தின் அணுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில், எஸ்.எஸ். காலனியில், உள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, மதுரையின் பல்வேறு பகுதியில் இருந்து சிறுவர், சிறுமியர்கள் கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். கோவிலுக்கு வந்த அத்தனை கிருஷ்ணர் ராதைகளுக்கு, ஆடிட்டர் சேதுமாதவா பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதை தொடர்ந்து, எஸ். எஸ். காலனியில் உள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில், கிருஷ்ணர் ராதை சிலை மற்றும் ஸ்ரீ மகா பெரியவர் சிலை வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு , ஏராளமான பொதுமக்கள் குட்டி கிருஷ்ணர் ராதைகளின் சேட்டைகளை பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவன நெல்லை பாலு செய்திருந்தார்.

Next Story