கறிக்கோழி வளர்ப்போர் சங்கத்தினர் அமைச்சர் மூர்த்தியிடம் மனு அளிப்பு
கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமன வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு சங்கத்தினர் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கறிக்கோழி வளர்ப்பு சங்கத்தினர் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வணிவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம், மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதனால், தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் இதனை நம்பியுள்ள சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், ஆகையால், தமிழக முதல்வர் உடனடியாக எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்டத்தில் உள்ள கறிக்கோழி வளர்ப்போர் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியை, நேரி ல் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும், இது சம்பந்தமாக கறிக்கோழி வளர்ப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மதுரை மாவட்டம், மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச் சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து கடந்த 4ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்கள் சங்கத்தில், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் 47 கம்பெனிகளை நம்பி சுமார் இரண்டு லட்சம் குடும்பங்கள் உள்ளன. இந்தத் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால், வாழ்வாதாரம் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், தமிழக முதல்வர் உடனே தலையிட்டு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற.ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், கம்பெனிகள் கோழிப்பண்ணை தொழிலில் ஒப்பந்த அடிப்படையில் 45 நாட்களுக்கு கோழிகளை வளர்த்து கொடுத்தால், கிலோவிற்கு ஆறு ரூபாய் ஐம்பது பைசா என்று நிர்ணயித்து உள்ளன.தற்போது, உள்ள விலைவாசி மற்றும் வேலையாட்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சூழல் காரணமாக கறிக்கோழி வளர்ப்பு தொழில்.மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகிறது .
அதனைக் கருத்தில் கொண்டு , 45 நாள் கோழிகளை வளர்த்து கொடுத்தால் கிலோ ஒன்றுக்கு 15 வீதம் கம்பெனிகள் எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், எங்கள் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளோம் .இது சம்பந்தமான மனுவினை, தமிழக வணிகவரி பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் கொடுத்துள்ளோம். அவரும், மனுவை உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி கூறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், சங்க ஆலோசகர் விக்ரமங்கலத்தைச் சேர்ந்த உல்லாசம் பால்பாண்டி, கஜேந்திரா குரூப் கண்ணன், தலைவர் அருண் பிரசாத், செயலாளர் மாயழகன், பொருளாளர் ராமதாஸ், மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், கணேஷ், முருகன் ,ரமேஷ் கணேசன் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu