பொதும்பு சார் பதிவாளர் அலுவலகத்துடன் இணைந்துள்ள பகுதிகளை மாற்றக்கூடாது

பொதும்பு சார் பதிவாளர் அலுவலகத்துடன் இணைந்துள்ள பகுதிகளை மாற்றக்கூடாது
X

பைல் படம்

தமிழக பதிவுத்துறை அமைச்சர் விளாங்குடி, பரவை, சமயநல்லூர் ஆகியபகுதிகள் பொதும்பு சார்பதிவாளர் அலுவலகத்துடன் இருக்க வேண்டும்

பரவை மற்றும் விளாங்குடி பகுதிகளை, தல்லாகுளம் சார் பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மதுரை அருகேயுள்ள விளாங்குடி, பரவை, சமயநல்லூர் பகுதிகளை, மதுரை தல்லாகுளம் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட வெள்ளாலர் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகி ராம்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் புதியதாக 50 புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்ட முயற்சியானது நல்ல பணியாகும். இதனால், பொதுமக்கள் பதிவுக்கு செல்ல வேண்டியதில் இடர்பாடுகள் குறைய வாய்ப்புள்ளது.மேலும், மதுரை அருகே பொதும்பில், புதியதாக சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகவும், அதில், விளாங்குடி, பரவை, சமயநல்லூர் பகுதிகள் சேர்க்கப்படவுள்ளதாக, தகவல் வெளியாகின.

இந்த நிலையில், மதுரை அருகே உள்ள விளாங்குடி, பரவை, சமயநல்லூர் பகுதிகளை, மதுரை தல்லாகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இணைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், கிராமத்து மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.ஆகவே, தமிழக பதிவுத்துறை அமைச்சர், விளாங்குடி, பரவை, சமயநல்லூர் ஆகிய பகுதிகளை, பொதும்பு சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

Tags

Next Story