மதுரையில் சடலம் எரியூட்ட கூலி தகராறு: 3 பேர் கைது

மதுரையில் சடலம் எரியூட்ட கூலி தகராறு: 3 பேர் கைது
X
மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 9 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

மதுரையில் சடலத்தை எரிப்பதில் நடந்த கூலி தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

மதுரை, ஆத்திகுளம் அங்கையர் கன்னி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஸ்ரீ விஷ்ணு ராம்(24.) இவரது தாத்தா உயிரிழந்தார் .அவர் உடலை மயானத்தில் எரித்தனர்.அப்போது அந்த பணியில் கே புதூர் காஞ்திபுரம் பாண்டியன் நகர் அந்தோணி 52 என்பவர் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவர் மகன் மகன் விக்னேஷ்(22 ) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர் .அதன் பிறகு எரிப்பதற்கான கூலியை கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் வாலிபர் ஸ்ரீ விஷ்ணு ராமை கல்லாலும் கையாளும் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீ விஷ்ணு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் நான்கு பேர்மீது வழக்கு செய்து 17 வயது சிறுவனையும் கே புதூர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தந்தை மகனான அந்தோணி அவர் மகன் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

உத்தங்குடியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

மதுரை உத்தங்குடி மந்தை அம்மன் கோவில் தெரு, மங்கல குடியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி மீனா 25. இவர் மூக்குப்பொடிக்கு அடிமையான நிலையில் அடிக்கடி பயன்படுத்தி வந்தார். இதனால் அவருடைய மனநிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தாய் சின்ன பொண்ணு கே புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண் மீனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: இரண்டுபேர் கைது

மதுரை காமராஜர் சாலையில் வங்கி ஒன்றின் அருகே இருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட தெப்பக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அவர்களை பிடித்து விசாரித்தார். விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட லாரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. விற்பனை செய்த பணம் ரூ.மூன்றாயிரத்து இருநூற்று என்பதையும் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தார் .பிடிபட்ட நபரிடம் விசாரித்த போது அவர்கள் காமராஜர் சாலை நவரத்தின புரம் மூன்றாவது தெரு சுரேஷ் பாபு(58,) முனிச்சாலை பூந்தோட்ட தெரு சீனிவாசன்(55 )என்று தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் ர் கைது செய்தார்.

ஜெய்ஹிந்த்புரத்தில் கஞ்சா விற்பனை: நான்கு பேர் கைது.

மதுரை, ஜெய்ஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்லால். இவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் .அவர் அம்பேத்கர் நகர் ஜீவா நகர் 2வது தெருவில் சென்றபோது அங்கு கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை பிடித்தார் .அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது.அவற்றை இரண்டு பைக்குகளில் பதுக்கி வைத்திருந்தனர். அந்த பைக்குகளையும் பறிமுதல் செய்தார்.பின்னர் பிடிபட்டவர்களிடம் நணத்திய விசாரணையில் அவர்கள் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கண்ணன் மகன் கணேஷ்(20,)ஜெய்ஹிந்துபுரம் அண்ணா மெயின் வீதி நல்லதம்பி மகன் முகேஷ் குமார்(20,) ஜீவா நகர் அம்பேத்கர் நகர் தங்கமலை மகன் ராமர்(29,)ஜெய்ஹிந்துபுரம் அண்ணா மெயின் வீதி தியாகராஜன் மகன் முத்து செல்வம்( 21 )என்று தெரிய வந்தது இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!