மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 19 பேர் கைது
பைல் படம்
திருநகரில் கோவிலில் விளக்கு திருட்டு:பெண் உட்பட இரண்டு பேர் கைது:
மதுரை, திருப்பரங்குன்றம் தேவி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் 50. இவர், திருநகர் ஜிஎஸ்சி ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவிலின் நிர்வாகி ஆவார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல் கோவிலுக்கு சென்றபோது, கோவிலுக்குள் இருந்த தொங்கு விளக்கை இரண்டு பேர் திருடிக் கொண்டிருந்தனர். அப்போது ,அவர்களை கையும் களவுமாக அவர் பிடித்தார்.அந்த நபர்களை திருநகர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தத்தனேரியே சேர்ந்த ராமு மகன் கார்த்திக் 28, அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மனைவி அனிதா 33 .என்று, தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பாண்டி கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது :ரூ 38 ஆயிரம் பறிமுதல்
மதுரை, மாட்டுத்தாவணி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், பாண்டி கோவில் ரோட்டில் தனியார் கல்லூரி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்தப்பகுதியில் மனமகிழ்மன்றத்தின் உள்ளிருந்து உள்ளே வெளியே என்றபடி பணம் வைத்து பத்து பேர் கொண்ட கும்பல்சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை, போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் காளியப்பன், முத்து பாலா ,கௌதம், சிவகுமார், சௌந்தர குமார் உட்பட 10 பேர் இருந்தனர். அவர்களிடமிருந்து ரூ 38,ஆயிரத்தையும் சீட்டுக்கட்டுகளையும் வைத்து டோக்கன்களையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
பெண்ணை ஆபாசமாக பேசி தாக்குதல் பிளம்பர் கைது:
மதுரை , பைபாஸ் ரோடு சிங்காரி நகர் விரிவாக்கம் பகுதி முத்துப்பாண்டி நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் 49. இவருடைய மனைவி காளீஸ்வரி. எஸ். எஸ். காலனி பார்த்தசாரதி தெருவைச்சேர்ந்தவர் மைக்கேல் பிரகாசம் மகன் பிரேம்குமார்.இவர் பிளம்பிங் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று, மோகனசுந்தரம் வீட்டில் பிளம்பிங் வேலை செய்த போது அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற பிரேம்குமார் அவரை ஆபாசமாக பேசி அவருடைய மனைவி காளீஸ்வரியையும் ஆபாசமாக பேசினார்.அவரை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் குறித்து மோகனசுந்தரம், எஸ் . எஸ் .காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார், வழக்குப் பதிவு செய்து, மோகனசுந்தரத்தையும் அவர் மனைவி காளீஸ்வரியையும் தாக்கிய பிளம்பர் பிரேம்குமாரை கைது செய்தனர்.
கூடல் புதூரில்,வழிப்பறி திட்டமிட்டிருந்த வாலிபர் கைது :வாள் பறிமுதல்
மதுரை ,கூடல்புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார். இவர், போலீசாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.அவர்கள், கூடல் நகர் அகதிகள் முகாம் அருகே விநாயகர் கோவில் அருகே சென்றனர்.அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்தனர்.அவரிடம் வாள் ஒன்று இருந்தது.அதே பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையில் அவர் அகதிகள் முகாமை சேர்ந்த சிவக்குமார் மகன் பவித்ரன் 23.என்று தெரியவந்தது .
அவரிடம் , போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் , திறனுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தன்னை தற்காத்துக் கொள்வதற்காகவும், அந்த பகுதியில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் , அதனால் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும்,வழிப்பறி செய்யவும் வாள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்து அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்தனர்.
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
மதுரை , விளாச்சேரி தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முருகன் 65. இவர் அந்த பகுதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் நிர்வாகியாவார் .இந்த கோவிலில் திருவிழாவும் அதைத்தொடர்ந்து ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது, மேடையில் ஏறிய விளாச்சேரி பசும்பொன் தெருவை சேர்ந்த சிங்கராஜ் மகன் மாட்டுமூளை என்ற அஜித் 27 என்ற வாலிபர் நடனமாட தொடங்கினார்.
நிர்வாகி என்ற முறையில் முருகன் அவரை கண்டித்து எச்சரித்து அனுப்பினார். இதனால், ஆத்திரம டைந்த அஜித் அவரை ஆகாசமாக பேசி தாக்கி வாளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் குறித்து, கோயில் நிர்வாகி முருகன் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து, அவருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் மாட்டு மூளை என்ற அஜித் 27 என்பவரை கைது செய்தனர்.
சொத்து பிரச்னையில் வாலிபருக்குபீர் பாட்டில் அடி:மற்றொரு வாலிபர் கைது
மதுரை , செல்லூர் சுயராஜ்யபுரம் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் விவேக் 31. செல்லூர் பந்தல்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் முத்துக்குமார் 19. இவர்களுக்குள் சொத்து பிரச்சனை இருந்து வந்தது .இந்த நிலையில், நரிமேடு பி.டி.ராஜன் ரோட்டில் சென்றுகொண்டிருந்த விவேக்கை , முத்துக்குமாரரும் அதேபகுதியை சேர்ந்த, பாண்டி மகன் சௌந்தர் என்ற சௌந்தரபாண்டி 32. ஆகிய இருவரும் வழிமறித்து ஆபாசமாக பேசினார். அவர்கள் கீழே கிடந்த பீர்பாட்டில் எடுத்து சரமாரியாக விவேக்கை தாக்கினர். இந்த சம்பவம் குறித்து, விவேக், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.சௌந்தர் என்ற சௌந்தரபாண்டியை தேடி வருகின்றனர்.
கொத்தனாருக்கு சரமாரி வெட்டு: மூன்று வாலிபர்கள் கைது
மதுரை, ஆலங்குளத்தில் முன் விரோதத்தில் கொத்தனாரை சரமாரியாக வெட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.இமயம் நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் முத்தையா மகன் மணிமுத்து 27.இவர், கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதி டிசைன் நகரை சேர்ந்தவர் பாண்டி மகன் பிரதீப் 20 .இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், ஆலங்குளம் இமயம் நகர் சிவன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த மணி முத்துவை பிரதீப்20, அஹிம்சாரம் நான்காவது தெரு சந்தான பாண்டியன் அஜித் 21 ,சமுதாயம், பிரசன்னா நகர் வெள்ளைச்சாமி மகன் பாண்டியராஜன் 20, டிசைன் நகர் பாண்டி மகன் பிரசன்னா 21, ராஜு ஆகிய ஆறு பேர் வழிமறித்து சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டினர். அப்போது,அவர் கூச்சல் போடவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து மணிமுத்து , கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பிரதீப் 20, பாண்டியராஜன் 20, பிரசன்னா 21 ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu