சோழவந்தான் ரயில்வே மேம்பாலம்: காணொளி மூலம் திறந்த பிரதமர் மோடி
சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் காணொளி மூலம் திறப்பு.
மதுரை கோட்டத்தில், இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில், சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும், ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் சுமார் 49 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ரயில்வே மேம்பாலத்தை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்கான காணொளி நிகழ்ச்சி விழா சோழவந்தான் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, பாஜக மாவட்டப் பொருளாளர் முத்துராம், ரயில்வே பள்ளி மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மதுரை ரயில்வே கோட்ட உதவி கோட்ட பொறியாளர் முத்தையா வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், மதுரை ரயில்வே பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. பகல் 12. 20 மணியளவில் பாரதப் பிரதமர்மோடி காணொளி வாயிலாக சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து பேசினார். இதில், சோழவந்தான் ரயில் பயணிகள் நலச்சங்க உதவிச் செயலாளர் சுப்பிரமணியன், வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள் ஒர்க் ஷாப் முருகன், செந்தமிழன், செல்வி,ராஜா, வாசுதேவன், விஸ்வ ஹிந்து பரிஷத் முருகன், முருகேஸ்வரி,ரமேஷ், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ராஜேஷ், கருப்பணன் சோழவந்தான் பிராமணர் சங்க நிர்வாகிகள் வெங்கட்ராமன், காசி விஸ்வநாதன், நாகேஸ்வரன் , சி. ஆர். பி. காவல் ஆய்வாளர் ஜெயபிரிட்டோ, வக்கீல் பாண்டுரங்கன் உள்பட ரயில்வே பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிலைய கண்காணிப்பாளர் சுந்தர் கணேஷ் நன்றி தெரிவித்தார். சோழவந்தான் காவல் உதவி ஆய்வாளர் சின்னன் மற்றும் போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu