பெட்ரோல் விலை குறைப்பு; திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி

பெட்ரோல் விலை குறைப்பு; திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி
X

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் நடந்த கலந்தாய்வு கூட்டம்.

பெட்ரோல் விலையை குறைப்போம் என வாக்குறுதி அளித்த திமுக தற்போது தயக்கம் ஏன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது. விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது தயக்கம் ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் ,திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இந்த கூட்டதிற்கு, முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், உலக அளவில் தடுப்பூசிக்கு, டெண்டர் விட்டு இதன் மூலம் கோடிக்கணக்கில் தடுப்பூசி பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால், மக்களுக்கு ஏமாற்றத்தை அரசு தந்தனர். அதேபோல், நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். தற்போது, தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை தந்து உள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்று 7.5 சதவீத இட ஒதுக்கீடை எடப்பாடியார் செய்தார். இதன் மூலம் 435 மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கின்றனர்.

அம்மாவின் அரசை அடிமை அரசு என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் விமர்சனம் செய்தார். ஆனால், இதே காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்கள் முடக்கினர். அதனைத் தொடர்ந்து, மத்திய அரசை வலியுறுத்தி காவிரி ஆணையத்தை எடப்பாடியார் பெற்றுத்தந்தார். தோழமை கூட்டணியாக இருந்தாலும், தமிழகத்தின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக் கொடுத்ததில்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும், அரசு ஒரு லிட்டர்பெட்ரோல், டீசல்வரியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பீகாரை எடுத்துக்கொண்டால், ஒரு லிட்டருக்கு பெட்ரோல் 24.71 சதவீதமும், டீசலுக்கு 18.34 சதவீதமும் வரியை குறைத்துள்ளது. டில்லியில் பெட்ரோலுக்கு 27 சதவீதமும் டீசலுக்கு 17.24 சதவீதமும், கோவாவில் பெட்ரோலுக்கு 16.66 சதவீதமும்,டீசலுக்கு 18.88 சதவீதமும் குறைத்துள்ளது.

குஜராத்தில் 25.45 சதவீதமும், டீசலுக்கு 25.55 சதவீதம், மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோலுக்கு 25.25 சதவீதமும் டீசலுக்கு 17.54 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் பெட்ரோலுக்கு 26.90 சதவீதமும், டீசலுக்கு 16.84 சகவீதமும், உத்தரகாண்டில் பெட்ரோலுக்கு 27.15 சதவீதமும், டீசலுக்கு 16.82 சதவீதமும்வரி விதிக்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் பெட்ரோலுக்கு 32.16 சகவிதமும் டீசலுக்கு 24.08சகவீதமும் விதிக்கப்படுகிறது. இதன் மூலம், பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு 27.75 ரூபாயும் டீசலுக்கு 20.35 ரூபாயும் அரசுக்கு கிடைக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தற்போது, 75 நாட்களாகயும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப் படவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும். இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கைத்தறி தொழிலாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார்கள். அதேபோல், விசைத்தறி தொழிலாளர்களுக்கும் இலவசமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கினார்கள். இதன் மூலம், 1,20,968 கைத்தறி தொழிலாளர்களும், அதேபோல், 1,06,432விசைத்தறி தொழிலாளர்கள் பயன் பெற்று வந்தார்கள். தற்போது, இந்த இலவச மின்சாரத் திட்டத்தை அரசு தொடந்து வழங்கிட வேண்டும்.

தடுப்பூசியில், வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் கூறியுள்ளார். இதை விட அரசுக்கு தயக்கம் ஏன். ஆனால், எங்கள் மீது பழி சுமத்தும் வண்ணம் தடுப்பு ஊசி அதிமுக ஆட்சியில் வீணடிக்க பட்டதாக கூறுகின்றனர். அப்போது தடுப்பூசி போடுதல் மக்களிடத்தில் விழிப்புணர்வு குறைவாக இருந்தது. மேலும், தடுப்பூசி போடுவதால், உயிர்பலி ஏற்படும் என்று மக்கள் மத்தியில் சிலர் அச்சத்தை பரப்பி விட்டனர்.

தற்போது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, எங்கள் மீது பழி சுமத்தாமல், தடுப்பூசியில், வெள்ளை அறிக்கை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ,மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், வேலுச்சாமி, போத்திராஜா, ஜஹாங்கீர், சிங்கராஜ பாண்டியன், சரவண பாண்டியன், ராமகிருஷ்ணன்,பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, கொரியர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil