மதுரை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனு

மதுரை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனு
X

மதுரை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டயிட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் விருப்ப மனு அளித்த பாண்டிச்செல்வி

மதுரை மாநகராட்சி அனுப்பானடி 88-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் மனு அளித்தார்

மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மாவட்ட நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜுவிடம் அதிமுகவினர் விருப்ப மனு அளித்தனர்.

மதுரை மாநகராட்சி அனுப்பானடி 88-வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட, முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலருமான செல்லூர் கே. ராஜூவிடம், நிர்வாகி பாண்டிச் செல்வி மனு அளித்தார். இதில், மதுரை மாநகர் அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் எஸ். பாலமுருகன், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலர் கமலக்கண்ணன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் மேயர் கு. திரவியம், மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!