மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

பைல் படம்.

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை 28.12.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற உள்ளது.

அதன்படி, நாளை 28.12.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும்; முகாம் நடைபெறுகிறது. இந்த குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

எனவே, பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும் அந்தந்த மண்டலங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் ,அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் முகாமில், கொடுத்து பயன்பெறுமாறு ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
the future of ai in healthcare