பங்குனி உத்திரம்: முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

பங்குனி உத்திரம்: முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்
X

சிறப்பு அலங்காரத்தில் மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் 

சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் பூஜை மாங்கல்ய பூஜை, நவகிரக பூஜை நடத்தப்பட்டு முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மதுரை, அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக, முருகனுக்கு, பக்தர்களால் பால், தயிர், இளநீர் போன்ற அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் பூஜை, மாங்கல்ய பூஜை, நவகிரக பூஜை ஆகியவை நடத்தப்பட்டு, முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள், முருகா, முருகா, என கோஷமிட்டனர் .

இதை எடுத்து, பக்தர்களுக்கு கோவில் ஆன்மீக பக்தர் பேரவையின் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று, மதுரை மேலமடை சௌபாக்கியவிநாயகர் ஆலயத்தில், பங்குனி உத்திரம் மற்றும் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, சந்தான, சௌபாக்கிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதை அடுத்து, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், சுப்பிரமணியர் ஹோமம், நவகிரக ஹோமங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture