மகா காளியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா

மகா காளியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா
X

 திருவிழாவின் முதல் நாள் விழாவான நேற்று கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. 

திருவிழாவின் முதல் நாள் விழாவான கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.

ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் 27-வது பங்குனி திருவிழா., அலகு குத்தி., பால்குடம் எடுத்தும்., அக்கினி சட்டி ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை, அவனியாபுரம் இமானுவேல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலில் 27-வது ஆண்டு பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவின் முதல் நாள் விழாவான நேற்று கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இரண்டாம் நாளான இன்று 50 மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், ராட்சச வாகனத்தில் பறவைக்காவடி எடுத்தும்., 5 முதல் 20 அடி நீளம் வரை ஆண் பாக்தர்கள் 20க்கும் மேற்பட்டோர் அலகு குத்தியும்., 20க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அக்கினி சட்டி ஏந்தியும்., கரும்பு தொட்டி சுமந்தவாறு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

முன்னதாக, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அழகு குத்தி., பால்குடம் எடுத்து அவனியாபுரம் மந்தையம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்று அங்கிருந்து ஊர் எல்லையான அய்யனார் கோவில் வரை சென்று சுற்றிவந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். ஆண்கள், பெண்கள் என அனைத்து பக்தர்களும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியதோடு ஸ்ரீ மாக காளியம்மனை தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து, முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும்., நாளை அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future