மதுரையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில்  மேல்நிலை நீர்த்தேக்க  தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்
X

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைக் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர், காலிப் பணியிடம் நிரப்பவேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். முருகேசன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags

Next Story
the future of ai in healthcare