ஒபிஎஸ் செல்லாத ரூபாய் நோட்டு: சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு
மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அத்தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா.
ஓ.பி.எஸ் மற்றும் ஆதரவாளர்கள் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டு போன்றவர்கள். கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால் யாரும் முகம் பார்த்து கூட பேசவில்லை, சிரிக்கவில்லை, இபிஎஸ்ஸும் சரி, நாங்களும் சரி, பரஸ்பரம் வணக்கம் கூட கூறிக்கொள்ளவில்லை. சிலையிலிருந்து உதிர்ந்த சிதறல்கள் ஒட்டாது. அது போலதான் ஒ.பி.எஸ் இனி, அதிமுகவில் சேர்க்கப்பட மாட்டார் என்றார் எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா.
மதுரை திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்கான முகாம் நடைபெற்றது. அதை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
30 வாக்கு சாவடிக்கான புதிய வாக்காளர் பட்டியல் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய வகுப்பு கட்டுவதற்கான பணி விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தேன்.
நேற்று மதுரை விமான நிலையத்தில் பிரதமர் முன்னிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பில் நடந்தது குறித்த கேள்விக்கு: அரசு பட்டியல்படி அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என வரிசைப்படி ஒரு பட்டியலை பிரதமர் அலுவலகத்தில் இருந்து கொடுத்தனர் அந்த வரிசையில் முன்னாள் முதலமைச்சர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் நின்றனர். எங்களுடைய 2532 பொது குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளோம். எங்கள் சட்ட திட்டப்படி கட்சியிலிருந்து ஒருவர் விலக்கப்பட்டால் அவரிடம் யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது.
அந்த அடிப்படையில் தான் 2532 பொதுக்குழு உறுப்பினர்களால் நீக்கப்பட்ட ஓபிஎஸ் திமுகவுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் விலக்கப்பட்டதால் அவருடன் யாரும் பேசவில்லை.முகம் பார்த்து கூட சிரிக்கவில்லை, இபிஎஸ் -ஸும் சரி, நாங்களும் சரி பரஸ்பரம் வணக்கம் கூட செலுத்திக் கொள்ளவில்லை. அதேபோல் பிரதமரும் வரிசையில் சந்தித்தார் தவிர வேறு வகையான எந்த ஒரு முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை. எடப்பாடியாரும் மோடியும் சிரித்துக் கொண்டே பேசினார். இபிஎஸ் பிரதமரிடம் ஹவ் ஆர் யூ எனக்கேட்டார். அதற்கு அவர் பதில் அளித்தார். தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்தார்.
நீதிமன்ற அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். அந்த வகையில் அதிமுக வலிவோடும், பொழிவோடும் உள்ளது யாருடைய தயவும், துணையும் தேவையில்லை. அதுபோல நாங்கள் யாரோடும் தொடர்பு கொள்ளவில்லை. யாரும் தொடர்பு ஏற்படுத்தவில்லை. இந்த இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவரை நாங்கள் கண்ணீர் செல்வமாகத்தான் பார்க்கிறோம், பசுதோல் போர்த்திய மனிதராக பார்க்கிறோம், செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டாக பார்க்கிறோம். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனியும் இருக்காது. அதில் மிகத் தெளிவாக இருக்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியோடு வெற்றியை ஈட்டுவோம். இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் திமுக மக்கள் விரோத சக்தியாக, மக்கள் மத்தியில் ஒதுக்கப்படுகிற சக்தியாக உள்ளது. எனவே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
நேற்று ஈபிஎஸ் பிரதமரை தனியாக சந்திக்க முயற்சி எடுத்தது குறித்த கேள்விக்கு, தனியாக சந்திக்க முயற்சி எடுக்கவில்லை, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கூட்டணியில் உள்ளதால் பிரதமரை வரவேற்றார். அப்படி தனியாக சந்தித்தாலும், தமிழகத்திற்கான கோரிக்கையைத்தான் கொடுப்பார். எங்கள் கட்சி வேறு, அவர்கள் கட்சி வேறு அவர்களும் இதில் தலையிட விரும்ப மாட்டார்கள்.
இன்று சென்னையில் அமித்ஷாவை சந்திப்பது குறித்த கேள்விக்கு,கூட்டணி கட்சி மத்திய அமைச்சர் என்பதால் சந்திக்கி றார்கள். முதல்வரும்தான் சந்திக்கிறார். அதற்காக திமுக- பாஜக கூட்டணி என்று சொல்ல முடியுமா. அது போல தான் இதுவும். அமித் ஷா கட்சியின் தலைவர், உள்துறை அமைச்சராக இருக்கிறார். அவரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைப்பார். மற்றபடி இணைப்புக்காகவோ, கூட்டணிக்காகவோ எதுவும் கிடையாது.
பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கேள்விக்கு, அதிமுக ஆட்சியின் போது அம்மாவே களத்தில் இறங்கினார். இபிஎஸ் பல்வேறு நிர்வாக திட்டங்களை கொண்டு வந்தார். மாவட்டம் தோறும் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து எங்கெங்கு தண்ணீர் தேங்குமோ அதை அகற்றுவதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்தார். அந்த வகையில் இன்று தண்ணீர் நிறைய தேங்கியுள்ளது. எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு தற்போது தான் பொதுமக்கள், பத்திரிகையாளர் உட்பட பலரும் பள்ளத்தில் விழுந்து இறப்பது போன்ற செய்திகளை அதிகமாக பார்க்கிறோம். இதை தவிர்ப்பதற்கு முறையான முயற்சிகளை இந்த அரசு எடுக்கவில்லை. இதற்கான முயற்சிகளை எடுத்தால் உயிர் பலியாவதை தடுக்கலாம் என்றார் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu