பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் ,முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
Old Students Meet
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடினார்கள். ஒன்று சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ,தமிழர் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் வேட்டி பெண்கள் பாரம்பரிய சேலை அணிந்தும் தாங்கள் படித்த பள்ளியில் கூடி பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் .
பின்னர், ஒருவருக்கொருவர் தங்களின் பள்ளி பருவத்தில் படித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நடத்தப்படகூடிய பானை உடைத்தல், ஈசி சேர், நீளம் தாண்டுதல், வாலியில் தண்ணீர் ஊற்றுதல் மற்றும் கண்கட்டி விளையாடுதல், லக்கி பாய் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு தாங்கள் படித்த போது பணியாற்றிய ஆசிரியர்களை கொண்டு பரிசுகளை வழங்கினர். பின்னர், தங்களின் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் மகிழ்ந்தனர் .
இந்த விழாவில், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் ராமராஜன், பொருளாளர் ராஜகுரு, துணைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன் ,துணைத் தலைவர் பரணி ராஜா, துணைச் செயலாளர் லெட்சர்கான் சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், முன்னாள் மாணவர் நன்றி கூற மீண்டும் அடுத்த பொங்கல் திருநாளில் சந்திப்பதாகவும் தாங்கள் படித்த பள்ளிக்கு அனைவரும் நிதி வசூலித்து உதவிகள் செய்யவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், மாணவர்கள் அனைவரும் சமூக வலைதள குரூப் ஆரம்பித்து அதில் தங்களின் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்யவும் கேட்டுக் கொண்டனர்.முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட இந்த நிகழ்ச்சி அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu