மதுரையில் ஆட்சிமொழி சட்ட வாரம்: ஆட்சியர்

மதுரையில் ஆட்சிமொழி சட்ட வாரம்: ஆட்சியர்
X

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் 01.03.2023 முதல் 08.03.2023 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப் படவுள்ளது

மதுரை மாவட்டத்தில் 01.03.2023 முதல் 08.03.2023 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது

2019-2020-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் "ஆட்சிமொழிச் சட்ட வாரம்” ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்த ஆண்டு 01.03.2023 முதல் 08.03.2023 வரை ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படவுள்ளது. பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தமிழறிஞர்கள் அரசு அலுவலர்கள்,வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணி நடத்தியும் அரசு அலுவலர்களுக்குக் கணினித் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் வரலாறு அரசாணைகள் பிழையின்றி தமிழில்குறிப்புகள் வரைவுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தும்

மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்களுடன் பட்டிமன்றம் நடத்தியும் ஒன்றியம், வட்டம் அளவில் அரசுப் பணியாளர்கள் பொதுமக்கள் தமிழ் அமைப்புகளுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தியும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.

தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிமொழிச்சட்ட வாரத்தினைச் சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மாநில அளவிலான டெனிகாயிட் போட்டியில் காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்