மதுரையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட வடநாட்டு பெண் மீட்பு
மதுரை மாட்டுதாவணி அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட வடமாநில பெண் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
மாட்டுத்தாவனிபகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மனநலன் பாதிக்கப் பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்துள்ளார்.அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் .நேற்று இரவு நேரத்தில் ஒரு ஆட்டோவில் வந்த கும்பல் அந்த பெண்ணை ஆட்டோவில் கடத்திச்செல்ல முயன்றனர்.
அப்போது அந்தப்பெண்போட்ட கூச்சலைக் கேட்ட அந்தப்பகுதியைச்சேர்ந்த கடை காரர்கள் அந்த பெண்ணை அவர்களிடமிருந்து மீட்டு உணவு, குடிநீர் கொடுத்து பழ மார்க்கெட் வணிக வளாகத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். மன நலன் பாதிக்கப் பட்டு இருப்பதால், எந்த அறக்கட்டளையினரும் காப்பகத்தில் சேர்க்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுபற்றிய தகவல் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர். வக்கீல். முத்துக்குமார்,சாம் சரவணன் ஆகியோரும் ரெட்கிராஸ் சமூக ஆர்வலர் மூகாம்பிகையும் அங்கு சென்றனர்.பிறகு காவல் துறைக்கு தகவல் கொடுத்து, போலீசார் உதவியுடன் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu