மதுரை கோரிபாளையத்தில் புதிய மேம்பாலம்: டெண்டர் வெளியீடு
மதுரையில் அமையவுள்ள புதிய மேம்பாலம்(மாதிரி வரை படம்)
மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் அழகர்கோவில் ரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரே புது நத்தம் ரோடு பாலம் துவங்குகிறது.அதனருகே பறக்கும் பாலம் துவங்கி தமுக்கம், கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு அருகே தாழ்வாக செல்லும் வகையில் அமைக்கப்படும். அங்கிருந்து ஏ.வி.பாலம் அருகே இணையானமற்றொரு தனி பாலம் துவங்கி நெல்பேட்டை அண்ணா சிலையில் முடியும். பீ.பி.குளத்தில்இருந்து வரும் வாகனங்களுக்காக தமுக்கம் நேரு சிலை அருகே துணைப் பாலம், செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு நோக்கிச் செல்ல, தேவர் சிலை அருகே தாழ்வாக மற்றொரு துணைப் பாலம் அமையும். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் ஒருவழிப் பாதை பாலமாக அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 3.2 கி.மீ.,நீளம், 12 மீ.,நீளத்தில் ரூ.175.80 கோடியில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் 20 தேதி வரை விண்ணப்பக்க கடைசி நாள் என்றும் அதன் பின் டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் 3 மாதங்களில் பணி துவங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி என்பது தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் படி ஓர் மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த நான்காவது பெரிய மாநகரம் ஆகும். இது மொத்தம் நூறு (100) வார்டுகளைக் கொண்டுள்ளது. சுமார் 147 சதுர கி.மீ கொண்ட இந்த மாநகராட்சி தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி க்கு அடுத்த நான்காவது பெரிய மாநகராட்சியும் ஆகும்.
இந்த மாநகராட்சி சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகளைப் போல சில நகராட்சிகளை உள்ளடக்கி உள்ளது. அது ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் நகராட்சிகள் ஆகும். இந்த மாநகராட்சி வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய என மொத்தம் ஐந்து மண்டலங்களைக் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி ஆண்டு வரி வருவாயில் 586 கோடி ரூபாய் வரி வசூல் செய்கிறது.இது தமிழக வரி வசூல் வருவாயில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான மதுரை மாவட்டத்தின் தலைநகராக உள்ள மதுரை உள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமான மதுரையை, 1971 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. வைகை ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாக மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu