அலங்காநல்லூரில் புதிய சமுதாயக் கூடம் திறப்பு..!

அலங்காநல்லூரில் புதிய சமுதாயக் கூடம் திறப்பு..!
X

புதிய சமுதாய கூடத்தை எம்.எல்.ஏ வெங்கடேசன் திறந்து வைத்தார்.

அலங்காநல்லூர் அருகே புதிய சமுதாய கூடத்தை எம்எல்ஏ வெங்கடேசன் திறந்துவைத்தார்.

அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் ரூ.55.75 லட்சத்தில் புதிய சமுதாய கூடம் திறப்பு - எம்.எல்.ஏ வெங்கடேசன் திறந்து வைத்தார்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி குறவன்குளம் கிராமத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக நிதி ரூ.55.75 லட்சம் மதிப்பீடு நவீன சமுதாயக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் ரகுபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் சுவாமிநாதன், வார்டு கவுன்சிலர் அபர்ணா, வரவேற்றார். முன்னதாக பாலமேடு அருகே பொந்துகம்பட்டி கிராமத்தில் 110 கிலோ வாட் திறன் கொண்ட புதிய ட்ரான்ஸ்பார்மரை எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் சுந்தர், பாலமேடு நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், பொந்துகம் பட்டி திமுக நிர்வாகிகள் பெருமாள், பூசாரி ஆதி கண்ணன், மற்றும் வக்கீல் அன்புச்செல்வம், குறவன்குளம் கண்ணன், வாசன், வலசை கார்த்திக்ராயர், துரை, உட்பட கட்டிட காண்ட்ராக்டர் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்