சோழவந்தான் அருகே அரசு அதிகாரிகள் அலட்சியத்தால், விவசாயம் பாதிப்பு..!

சோழவந்தான் அருகே அரசு அதிகாரிகள் அலட்சியத்தால், விவசாயம் பாதிப்பு..!
X

பாசன கால்வாயில் பைப் லைன் போடுவதற்கு தோண்டிய மண் கொட்டியுள்ளதால் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது.

சோழவந்தான் அருகே, பொதுப்பணித்துறை அதிகாரிகளால், பாசனக்கால்வாயில் மண் கொட்டி பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது.

சோழவந்தான் அருகே, பொதுப்பணித்துறை அதிகாரிகளால், பாசனக்கால்வாயில் மண் கொட்டி பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது.

சோழவந்தான் :

சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் கிராமத்தில், மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக பைப் பதிப்பதற்காக தோண்டப்பட்ட மண் பாசன வாய்க்காலில் மூடியதால், விவசாயம் செய்வதற்கு பாசனத்தண்ணீர் வராததால், சுமார் 100 ஏக்கர் நெல் விவசாயம் செய்யக்கூடிய நிலங்கள் தரிசாக உள்ளது.

இப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை பாசன வாய்க்கால் மூடி இருப்பதை அப்புறப்படுத்த கூறியுள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளுடைய அலட்சியத்தால், இங்கு சுமார் 100 ஏக்கர் நெல் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மாவட்ட கலெக்டர் இதுகுறித்து, நேரடியாக சம்பந்தப்பட்ட பாசன வாய்க்கால் மூடி இருப்பதை ஆய்வு செய்து விவசாயிகளுடைய கோரிக்கையை நிறைவேற்றும்படி, நாச்சிகுளம் பகுதி விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விவசாயம் நடைபெற்றால் தான் நாட்டின் உணவுப் பொருள் உற்பத்தி குறையாமல் இருக்கும். இப்படி அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 100 ஏக்கர் விவசாயம் செய்ய முடியாமல் பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அரசுதான் இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!