விவேகானந்தா கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஒருவர் படிக்க மற்றவர்கள் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
National Voters Day Pledge
இந்தியாவில் ஜனநாயகத்தைப் போற்றும் வகையில் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.அதுபோல் மாநில அளவில் சட்டசபைகளுக்கான தேர்தல், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் என ஒவ்வொரு தேர்தலும் தனித்தனியே நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க உரிமை கோருபவர்கள் 18வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
National Voters Day Pledge
திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஜனநாயக கடமை ஆகும். அந்த வகையில் மத்திய மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தினால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உரிய முறையில் பாதுகாப்போடு தேர்தல் நடத்தப்படுகிறது. இவிஎம் என்று சொல்லக்கூடிய வாக்களிக்கும் மெஷின் வாயிலாகவே தற்போதைய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் வாக்களிப்பது நமது கடமை என்பதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி , திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரியின் பிரார்த்தனை கூடத்தில் கொடுத்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். முதல்வர் முனைவர். வெங்கடேசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதிராஜா, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் அசோக்குமார், முனைவர் ரமேஷ்குமார், ரகு, முனைவர் ராஜ்குமார், மற்றும் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu