மதுரையில், தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி..!

மதுரையில், தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி..!
X

கண் தான விழிப்புணர்வு பேரணி.

மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி

மதுரை:

மதுரை கே. கே. நகரில் உள்ள டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாட்டுத்தாவணி காவல் ஆய்வாளர் மோகன் அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார் மற்றும் மாட்டு தாவணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் .

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர் சைலேந்திரா சிங், டாக்டர். அருண்குமார், மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இவ்விழாவில் தமிழ்நாடு சாந்தோம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் மாணவ, மாணவியர்கள் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நீதிமன்றம் பின்புறம் உள்ள அகர்வால் கண் மருத்துவமனை வரை பேரணியாக வந்தனர். இந்த பேரணியில் கண்தானம் செய்வதை வலியுறுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது