திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு..!
போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
மதுரை:
திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,மாவட்ட காவல்துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், அதன் கோட்டாசான் முத்தமிழ் கழகம், ரோஜாவனம் டிரஸ்ட் மற்றும் விவேகானந்த கல்லூரி இணைந்து உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான போதை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு, செயலர் சுவாமி வேதானந்த குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் வரவேற்புரை கூறினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதுரை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.எஸ்.சிவசுப்பு, இன்றைய சமூகத்தில் போதையினால் ஏற்படும் பாதிப்புகள், இளைஞர் களுடைய வாழ்க்கை சீரழிவதையும் எடுத்துக் கூறி, போதைப் பொருட்களை எங்கேனும் விற்பனை செய்தால் 10581 என்ற எண்ணிற்கு அழைக்கவும் என்று கூறினார்.
இந்நிகழ்வில், மதுரை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆர்.அரவிந்த், மதுரை மாவட்ட இந்திய செஞ்சிலுவைச்சங்கச் செயலாளர் ஏ.ராஜ்குமார் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் இ.வி.ரிஜின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்நிகழ்விற்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் கே.கார்த்திகேயன் நன்றியுரை கூறினார். அகத்தர உறுதிமைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.சதீஷ் பாபு நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் போதை விழிப்புணர்வு பற்றிய கருத்துரை கூறிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவல் நிலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu