/* */

திருமங்கலம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூக்குழி திருவிழா

திருமங்கலம் ஸ்ரீஎட்டு பட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு

HIGHLIGHTS

திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீஎட்டு பட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் கொல்லர் பட்டறை பகுதியில், பல ஆண்டுகள் பழமையான அருள்மிகு எட்டுபட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத திருவிழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.இந்த ஆண்டு 24 -ஆம் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு, அக்னிவிளக்கு வழிபாடு, மாவிளக்கு வழிபாடு, சுவாமி புறப்பாடு, பூச்சொரிதல், தீச்சட்டி எடுத்து முத்துமாரி அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு நேர்த்தி செலுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, அருள்மிகு ஸ்ரீபத்ரகாளி முத்துமாரியம்மனை தரிசித்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீரத நோய், வீடுகட்டுதல், திருமண தடை கர்மவினை நீங்க அம்மனை வேண்டி பக்தர்கள் காப்பு கட்டி, ஒரு மாத காலம் விரதம் இருந்து, பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இக்கோவிலில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முத்துமாரி அம்மனை வணங்கி வழிபட்டு சென்றனர்.

இக்கோவில் திருவிழா நிகழ்வுகளை திருமங்கலம் விஜயன், அதிமுக முன்னாள் அமைச்சர் திருமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் ஆர். பி. உதயகுமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைத் திருந்தனர். இதையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்