அலங்காநல்லூர் அருகே முத்தம்மாள் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

அலங்காநல்லூர் அருகே முத்தம்மாள் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
X

ஸ்ரீ முத்தம்மாள் அலங்காரத்தில் 

மதுரை, அலங்காநல்லூர் முத்தம்மாள் ஆலய மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

பெரிய இலந்தைகுளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தம்மாள் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தம்மாள் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கள இசை முழங்க விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜை, கணபதி ஹோமம், கிராம தெய்வங்களுக்கு, கனிவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, மூன்று காலை யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்

பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, வடக்கு தெரு ஆதிதிராவிடர் காலனி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

குடமுழுக்கு அல்லது கும்பாபிசேகம் (கும்பாபிஷேகம்) ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும்.

இதன்மூலம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது.குடத்தில் நீர் நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது குடமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது.

கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் ஒருவர் கோவிலுக்குள் செல்லாமலே கோபுர தரிசனம் மூலமே கடவுளின் அருளைப் பெற இயலும் என்பது இறையாளர்களின் நம்பிக்கை.

Tags

Next Story
ai solutions for small business