தென்கரை மூலநாதர் சுவாமி கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா..!
தென்கரை மூலநாதர் சுவாமி, ஆலயத்தில் முகூர்த்தக் கால் நடும் விழா.
சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி மூல நாத சாமி கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா:
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத , ஸ்ரீமூலநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வருகின்ற 15.9 2024 அன்று நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா கோயிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா மற்றும் கோவில் செயல் அலுவலர், பிரதோஷ கமிட்டியினர் கலந்து கொண்டனர். சிவாச்சாரியார்,பட்டர் கண்ணன் கும்பாபிஷேக குழுவினர் முகூர்த்தக்கால் நடுவதற்கான பணிகளை செய்தனர். நிகழ்ச்சியில், தென்கரை மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயில்களில் விழா சிறப்பாக நடைபெற வேண்டி, பூஜை, புனஸ்காரங்களுடன் கோயிலின் ஈசானிய மூலையில் பந்தக்கால் நடுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
திருமண முகூர்த்தக்கால்
அந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிப்பதற்காகவே பண்டைய காலம் தொட்டு திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் ஊன்றப்படும் வழக்கம் இருந்து வருகிறது. முகூர்த்த கால் நடப்பட்ட பிறகு துக்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள கூடாது என்ற கட்டுப்பாடும் நடைமுறையில் உள்ளது.
பந்தக்கால் நடும் முறை வந்தது எப்படி?
அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைவரின் திருமணத்துக்கும் அரசரால் செல்ல இயலாது. எனவே, தன் சார்பாக அவர் ஆணைப்படி ஆணைக்கோலை அனுப்பி வைப்பார்.
அரசு ஆணைக்கோல் என்பதே பின்னாளில் மருவி, அரசாணைக்கோல் ஆகிவிட்டது என்பது ஒரு தகவல். அன்று அரசரின் ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அந்தத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டது என்பதாக மகிழ்வார்கள். ஆகவே, பந்தக்கால் எனும் கல்யாண பந்தலில் கல்யாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதனை வழிபடுவது வழக்கமாகி இருக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu