விலை உயர்வு வதந்தியால் மதுரை பெட்ரோல் பங்க்குகளில் குவியும் வாகன ஓட்டிகள்
விலை உயரும் என்ற வதந்தி காரணமாக மதுரையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் பெட்ரோல் மற்றும் டீசல் போட காத்திருக்கும் வாகனங்கள்
மதுரையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் பெட்ரோல் மற்றும் டீசல் போட நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
இந்தியாவில் கடந்த 120 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏற்றப்படவில்லை. இந்த நிலையில், வடமாநிலங்களில் 4 மாநில சட்டமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது. உக்ரேன் ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை டாலர் 129 ரூபாயை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்ந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிக அளவு விலை உயரும் என அச்சத்தில் பல பெட்ரோல் நிலையங்களில் இருசக்கர வாகனம் ஓட்டிகள் மற்றும் கார்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிரப்புவதற்காக அதிக அளவு காத்திருந்தனர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறுகையில்: சராசரியாக ஒரு நாளைக்கு பெட்ரோல் 2000 முதல் 2500 லிட்டர் வரை விற்பனையாகும் தற்போது ,நாளை முதல் பெட்ரோல் விலை உயர்ந்து விடுமோ என அச்சத்தில், இன்று அதிக அளவு பெட்ரோல் மற்றும் டீசல் விலை போட்டு செல்கின்றனர். தற்போது வரை உங்களுக்கு 6 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனை ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார். எது எப்படியோ, பெட்ரோல் விலை ஏறுமா அல்லது வதந்தியா எனத் தெரியவில்லை. பொது மக்களை பாதிக்காத அளவுக்கு மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை ஏற்றாமல் இருந்தால் பொதுமக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu