மதுரை அருகே கால்வாய் சீரமைப்புப்பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர்
மதுரை மாவட்டம்,பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்டமுத்துப்பட்டியில், நீர்வளத்துறை சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது: மதுரை, மேலூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குளம் கிராமம், கண்டமுத்துப்பட்டியில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் நெடுகை தூரம் 47100 கி.மீ முதல் நெடுகை தூரம் 58000 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நபார்டு நிதியுதவியுடன் ரூ.465.இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டம்,மதுரை கிழக்கு வட்டத்தில் உள்ள மாங்குளம், சின்னமாங்குளம், கண்டமுத்துபட்டி, மீனாட்சிபுரம்,தேத்தம்படி ஆகிய 5 கிராமங்களும் மற்றும் மேலூர் வட்டத்தில் உள்ள கிடாரிபட்டி, அரிட்டாபட்டி, ஆ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, எட்டிமங்களம், சூரக்குண்டு, கல்லம்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, திருவாதவூர் ஆகிய 10 கிராமங்களும் பயன்பெறும்.
குறிப்பாக, பெரியாறு பிரதான கால்வாயின் இருபுற கரைகளில் உள்ள முட்செடிகளை அகற்றி கரைகள் பலப்படுத்தும் பணிகள், கால்வாயின் பக்கவாட்டு பகுதிகளில் சேதமடைந்த கானங்கீரிட் சிலாப்புகள் அகற்றப்பட்டு, சரிசெய்யும் பணிகள், பெரியாறு பிரதான கால்வாயின் குறுக்கே உள்ள மழைநீர் ஓடுபாலங்கள், மழைநீர் உட்புகும் மற்றும் வெளியேற்றும் கட்டுமானங்கள்,
நேரடி பாசன மடைகள் பழுதுபார்க்கும் பணிகள், பெரியாறு பிரதான கால்வாயின் குறுக்கே நெடுகை தூரம் 47940 கி.மீ உள்ள பாலத்தை மறுகட்டுமான செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படு வதன் மூலம் பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாயின் முழுநீர்கடத்தும் திறன் மீட்டெடுக்கப் பட்டு, விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கும் போது நீர்இழப்பு ஏற்படுவது குறையும்.
மதுரை மாவட்டத்தின்,மதுரை கிழக்கு வட்டம் மற்றும் மேலூர் வட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 192 கண்மாய்களுக்கும், 22332 ஏக்கர் பாசன நிலங்களும் முழு பாசன வசதி பெறும்.மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து அப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வாழ்வாதாரம் உயரும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
தொடர்ந்து, சின்னமாங்குளம் பகுதியில் உள்ள 40 குடியிருப்புகளைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் மழை காலத்தில் சாலை பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனைத் தவிர்த்திடும் வகையில் புதிதாக சிறுபாலம் அமைத்திட வேண்டும் என, கோரிக்கை வைத்தார்கள். இதனையடுத்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் விதமாக அப்பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து ஒருவார காலத்திற்குள் பணிகளை தொடங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும்,மேற்குறிப்பிட்ட 40 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வசதி வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது ,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன்,மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu